உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே…
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே…
வேதங்கள்-நாதங்கள் நீ போற்றுவாய்…இறைவா…!!!
பாபங்கள், சாபங்கள் பறந்தோடவே துணைவா…
அனைத்தையும் அறிந்திடும் ஜகத்குருவே நீயே….
தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா…
தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா…
நீரோடையாய் நடந்தாய்…
பார் முழுவதும் கலந்தாய்…
ஏற்றினாய்…ஞானஒளி ஏற்றினாய்…
கார்மேகமாய் படர்ந்தாய்…
கருணை மழையென பொழிந்தாய்… தூயவா…
துறவு கொண்ட பாலசேகரா….
சங்கரா.. ஜெய சங்கரா
தண்டம் ஏந்திய தாண்டவா….
குருவாய் வருவாய் நடராஜ ரூபனேor I r
திருவாய் மலர்வாய் நீ…. லோக சாந்தனே…
சங்கரா…சங்கரா…
சங்கரா..t ஜெய சங்கரா ..
உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே…
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே
No comments:
Post a Comment